Pages

Saturday 21 July 2012

தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா? தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான். ….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார். திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாகக் கூறவில்லை. மேலும் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி. அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை. ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டைகள், தொப்பிகள் அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 134, 366, 1838, 1842, 5794, 5803, 5805, 5806) இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு சில நபித் தோழர்கள் தொப்பி அணிந்திருந்தது கூட தொழுகைக்காக அல்ல. சாதாரணமாக ஓர் ஆடை என்ற அடிப்படையில் தான் அணிந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. (தொப்பி) கலன்ஸுவத் என்பதற்கு மொழி ஆய்வாளர் அபூஹிலால் அஸ்கரீ அவர்கள் விளக்கம் அளிக்கும் போதுஇ வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்கும் உடை என்று விளக்கம் தருகின்றார். மேலும் அதன் மேல் தலைப்பாகையைச் சுற்றலாம் என்றும் கூறுகின்றார். வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்கும் அளவுக்குக் கனமான, அடர்த்தியான கவசம் போன்ற ஆடை தான் தொப்பியைக் குறிக்கும் கலன்ஸுவத் என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தமாகும். தொழுகையுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. (நூல்: அபூதாவூத் 592) தொழுகைக்கு வெளியே வெயிலுக்காக அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பியைச் சிலர் அணிந்தது ஏன் என்பது விளங்குகின்றது. உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை ஒருவன் கத்தியால் குத்தினான். குத்தி விட்டு அவன் ஓடும் போது ஒருவர் அவன் மேல் தொப்பியை வீசியெறிந்து தாக்கினார். இதனால் நிலை குலைந்து போன அவன், பிடிபடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி புகாரியில் 3700வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொப்பியை எறிந்து ஒருவரை நிலை குலையச் செய்ய முடியும் என்றால் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த தொப்பி எதுவென்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏறக்குறைய இரும்புக் கவசம் போன்ற கடினமான தலையாடை தான் தொப்பி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இன்று தொப்பி என்ற பெயரால் அணியப்படும் ஆயிரம் கண்ணுடைய ஆடை(?)யால் மழையையும், வெயிலையும் தடுக்க முடியாது. அதன் மூலம் ஒரு ஈயைக் கூட நிலை குலையச் செய்ய முடியாது. மீண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால் தொப்பி அணியுமாறு ஆர்வமூட்டி எந்த நபிமொழியும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை. சில நபித் தோழர்கள் அணிந்துள்ளனர். வெயில், மழையிலிருந்து காக்கவே அதை அணிந்துள்ளனர். தொழுகைக்காக அல்ல. அந்தத் தொப்பிக்கும் இன்று தொப்பி என்று கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தொப்பி என்பது ஒரு ஆளைத் தாக்கி நிலை குலையச் செய்யும் ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை. தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை. தொப்பி அணியாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று கூறவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர். ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ரூஙரழவ்ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?” என்று விடை யளித்தார்கள். (நூல்: புகாரி 352) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள். (நூல்: புகாரி 353) இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது. நம்முடைய பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அது போல் ஒருவர் தொழுகையின் போதோஇ தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும்இ ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. தலைப்பாகை தலைப்பாகையைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணியுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதுமில்லை. தலைப்பாகை அணியுமாறு சிறப்பித்துக் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை. தலைப்பாகை அணிவதை வலியுறுத்தும் வகையில் உள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப் பட்டவையாக அல்லது பலவீனமானவையாக உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகையை வலியுறுத்தியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அம்ரு பின் உமைய்யா (ரலி) நூல்: புகாரி 205 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 2421 மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2418 இப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அவர்கள் உளூச் செய்த போதும்இ உரை நிகழ்த்திய போதும்இ பல்வேறு வெற்றிகளைப் பெற்ற போதும் அவர்களைப் பற்றிப் பேசும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலையின் முடி அலங்காரம் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன. அவர்கள் எல்லா நேரத்திலும் தலைப்பாகையுடன் இருந்திருந்தால் தலை முடியின் அலங்காரம் பற்றி இவ்வளவு வர்ணனைகள் நமக்குக் கிடைத்திருக்க முடியாது. எனவே மிகச் சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணியாமல் இருந்துள்ளனர். மேலும் இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந் தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது. ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போர்வையைச் சுற்றிக் கொண்டு தொழுதது போன்ற காரியங்களை நாம் சுன்னத் என்று கூறுவதில்லை. வணக்க வழிபாடுகள் தொடர்பில்லாத காரியங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைச் செய்வதுடன், செய்யுமாறு ஆணையிட்டால் தான் அது மார்க்கமாக ஆகும். மேற்கண்ட காரியங்களுக்கு எப்படி எந்தக் கட்டளையும் இல்லையோ அது போல் தலைப்பாகை அணிவதற்கும் கட்டளை இல்லை. எனவே தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தலைப்பாகை அணிய விரும்பினால் அணியலாம். விரும்பினால் அணியாமலும் இருக்கலாம். -பி. ஜைனுல் ஆபிதீன்


தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா?

தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.

….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.

திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாகக் கூறவில்லை. மேலும் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

 
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டைகள், தொப்பிகள் அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 134, 366, 1838, 1842, 5794, 5803, 5805, 5806)

 
இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

 
இவ்வாறு சில நபித் தோழர்கள் தொப்பி அணிந்திருந்தது கூட தொழுகைக்காக அல்ல. சாதாரணமாக ஓர் ஆடை என்ற அடிப்படையில் தான் அணிந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.

 
(தொப்பி) கலன்ஸுவத் என்பதற்கு மொழி ஆய்வாளர் அபூஹிலால் அஸ்கரீ அவர்கள் விளக்கம் அளிக்கும் போதுஇ வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்கும் உடை என்று விளக்கம் தருகின்றார். மேலும் அதன் மேல் தலைப்பாகையைச் சுற்றலாம் என்றும் கூறுகின்றார்.

 
வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்கும் அளவுக்குக் கனமான, அடர்த்தியான கவசம் போன்ற ஆடை தான் தொப்பியைக் குறிக்கும் கலன்ஸுவத் என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தமாகும். தொழுகையுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

 
ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. (நூல்: அபூதாவூத் 592)

 
தொழுகைக்கு வெளியே வெயிலுக்காக அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பியைச் சிலர் அணிந்தது ஏன் என்பது விளங்குகின்றது.

 
உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை ஒருவன் கத்தியால் குத்தினான். குத்தி விட்டு அவன் ஓடும் போது ஒருவர் அவன் மேல் தொப்பியை வீசியெறிந்து தாக்கினார். இதனால் நிலை குலைந்து போன அவன், பிடிபடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி புகாரியில் 3700வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
தொப்பியை எறிந்து ஒருவரை நிலை குலையச் செய்ய முடியும் என்றால் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த தொப்பி எதுவென்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏறக்குறைய இரும்புக் கவசம் போன்ற கடினமான தலையாடை தான் தொப்பி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 
இன்று தொப்பி என்ற பெயரால் அணியப்படும் ஆயிரம் கண்ணுடைய ஆடை(?)யால் மழையையும், வெயிலையும் தடுக்க முடியாது. அதன் மூலம் ஒரு ஈயைக் கூட நிலை குலையச் செய்ய முடியாது.

 
மீண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால்

 
தொப்பி அணியுமாறு ஆர்வமூட்டி எந்த நபிமொழியும் இல்லை.

 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை.

 
சில நபித் தோழர்கள் அணிந்துள்ளனர்.

 
வெயில், மழையிலிருந்து காக்கவே அதை அணிந்துள்ளனர். தொழுகைக்காக அல்ல.

 
அந்தத் தொப்பிக்கும் இன்று தொப்பி என்று கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

 
தொப்பி என்பது ஒரு ஆளைத் தாக்கி நிலை குலையச் செய்யும் ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 
இந்த நிலையில் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை.

 
தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.

 
தொப்பி அணியாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று கூறவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

 
தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர்.

 
ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ரூஙரழவ்ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?” என்று விடை யளித்தார்கள். (நூல்: புகாரி 352)

 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.

 
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள். (நூல்: புகாரி 353)

 
இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.

 
நம்முடைய பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

 
அது போல் ஒருவர் தொழுகையின் போதோஇ தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும்இ ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

 
தலைப்பாகை
தலைப்பாகையைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணியுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதுமில்லை. தலைப்பாகை அணியுமாறு சிறப்பித்துக் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை.

 
தலைப்பாகை அணிவதை வலியுறுத்தும் வகையில் உள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப் பட்டவையாக அல்லது பலவீனமானவையாக உள்ளன.

 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகையை வலியுறுத்தியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

 
அறிவிப்பவர்: அம்ரு பின் உமைய்யா (ரலி) நூல்: புகாரி 205

 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன்.

 
அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 2421

 
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள்.

 
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2418

 
இப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 
அவர்கள் உளூச் செய்த போதும்இ உரை நிகழ்த்திய போதும்இ பல்வேறு வெற்றிகளைப் பெற்ற போதும் அவர்களைப் பற்றிப் பேசும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லை.

 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலையின் முடி அலங்காரம் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன. அவர்கள் எல்லா நேரத்திலும் தலைப்பாகையுடன் இருந்திருந்தால் தலை முடியின் அலங்காரம் பற்றி இவ்வளவு வர்ணனைகள் நமக்குக் கிடைத்திருக்க முடியாது.

 
எனவே மிகச் சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணியாமல் இருந்துள்ளனர்.

 
மேலும் இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 
ஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந் தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது.

 
ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போர்வையைச் சுற்றிக் கொண்டு தொழுதது போன்ற காரியங்களை நாம் சுன்னத் என்று கூறுவதில்லை. வணக்க வழிபாடுகள் தொடர்பில்லாத காரியங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைச் செய்வதுடன், செய்யுமாறு ஆணையிட்டால் தான் அது மார்க்கமாக ஆகும். மேற்கண்ட காரியங்களுக்கு எப்படி எந்தக் கட்டளையும் இல்லையோ அது போல் தலைப்பாகை அணிவதற்கும் கட்டளை இல்லை.

 
எனவே தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தலைப்பாகை அணிய விரும்பினால் அணியலாம். விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.

-பி. ஜைனுல் ஆபிதீன்

யார் சுன்னத் ஜமாஅத்? சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை! சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது. சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான்.இதோ ஆதாரம் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்,நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132) இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும். அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும். அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்! அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்! இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்! நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம் எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும் மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். இந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா? சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத் சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா? சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா? நபி வழி சுன்னத்; எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது இணைவைப்பு வழிபாடு கிடையாது மார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது! நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும்அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள், வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது! சுன்னத் ஜமாஅத்; சாதாரணஎறும்பு கடித்தால் கூடா யா! கவுஸ், நாகூர் ஆண்டவரே, என்று ஈமானைபரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது சமாதி வழிபாடு முக்கியத்துவம் மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிது, பைஅத், தீட்சை என்று நம்பி மோசம் போவது! ஸலவாத்துன்நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது! இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது! இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது சுன்னத்ஜமாஅத்தினரே இது சுன்னத்தா? தர்காஹ் போவது சுன்னத்தா? அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா? கப்ரு வணங்கம் சுன்னத்தா? மவ்லூது சுன்னத்தா? மீலாது சுன்னத்தா? ஸலவாத்துன்நாரியா சுன்னத்தா? தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா? முரீது சுன்னத்தா? ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா? கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா? 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா? 1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா? வரதட்சனை வாங்குவது சுன்னத்தா? வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா? நாகூர் மொட்டை சுன்னத்தா? தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா? மரணித்தால் ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா? சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா? விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா? உருஸ், படையல் சுன்னத்தா? சந்தனகூடு சுன்னத்தா? கொடிமரம் சுன்னத்தா? அவ்லியாக்களுக்கு நேர்ச்சை சுன்னத்தா? கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா? தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா? கவ்வாலி இசைக்கச்சேரிகள் சுன்னத்தா? யானை குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா? ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா? கருமணி தாலி கட்டுதல் சுன்னத்தா? மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா? சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா? அல்லாஹ்ஓவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்களை அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான்எந்த நபியாவது மேற்கண்ட இழிசெயல்களை செய்து காட்டினார்களா? குர்ஆன் ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்! சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்! அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான சுன்னத் ஜமாஅத்தினர் என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா? கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்க கூடாதா? இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது ‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்)கூறினார். (திருக் குர்ஆன் 5:72) இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம் (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்,இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6) இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும் அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88) இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன்39:65,66) இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!” நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!”என்று(முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066) அல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்,அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 ) பெயர் மாற்ற கோரிக்கை நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர் வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது எனவே சுன்னத்வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறேன்! என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! Newer Post Older Post Home


யார் சுன்னத் ஜமாஅத்?

சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை!
சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.

சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான்.இதோ ஆதாரம்
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்,நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
  • அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்.
  • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்! இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!
நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும்,தங்களுக்கும் மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.
இந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?
சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா? சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?

நபி வழி சுன்னத்; 
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. 
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது
இணைவைப்பு வழிபாடு கிடையாது

மார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது! 

நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும்அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள்வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது

இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது

அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது!



சுன்னத் ஜமாஅத்;

சாதாரணஎறும்பு கடித்தால் கூடா யா! கவுஸ்நாகூர் ஆண்டவரேஎன்று ஈமானைபரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவதுஉதவி தேடுவது

அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது

சமாதி வழிபாடு முக்கியத்துவம்

மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது

பச்சை ஆடை உடுத்திதாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிதுபைஅத்,தீட்சை என்று நம்பி மோசம் போவது! 

ஸலவாத்துன்நாரியாமவ்லூதுஷிர்க்கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது! 

இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாகசெத்துப்போன மனிதர்களை கருதுவது! 

இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது


சுன்னத்ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?
  • தர்காஹ் போவது சுன்னத்தா?
  • அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
  • கப்ரு வணங்கம் சுன்னத்தா?
  • மவ்லூது சுன்னத்தா?
  • மீலாது சுன்னத்தா?
  • ஸலவாத்துன்நாரியா சுன்னத்தா?
  • தாயத்துதட்டுதகடு சுன்னத்தா?
  • முரீது சுன்னத்தா?
  • ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
  • கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
  • 10ம் நாள்20ம் நாள்40ம் நாள்ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
  • 1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா
  • ஸபர்முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
  • வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
  • வளர்பிறைதேய்பிறை சகுணம் சுன்னத்தா?
  • நாகூர் மொட்டை சுன்னத்தா?
  • தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
  • மரணித்தால் ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா?
  • சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
  • விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
  • உருஸ்படையல் சுன்னத்தா?
  • சந்தனகூடு சுன்னத்தா?
  • கொடிமரம் சுன்னத்தா?
  • அவ்லியாக்களுக்கு நேர்ச்சை சுன்னத்தா?
  • கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
  • தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
  • கவ்வாலி இசைக்கச்சேரிகள் சுன்னத்தா?
  • யானை குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
  • ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
  • கருமணி தாலி கட்டுதல் சுன்னத்தா?
  • மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
  • சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?
அல்லாஹ்ஓவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்களை அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான்எந்த நபியாவது மேற்கண்ட இழிசெயல்களை செய்து காட்டினார்களாகுர்ஆன் ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!
சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்!
அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான சுன்னத் ஜமாஅத்தினர் என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமாகீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்க கூடாதா?
இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்)கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்,இணை கற்பிப்போரும்நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)
இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும்.
நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன்39:65,66)
இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று(முஹம்மதே) உமக்கும்,உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன்039:065,066)
அல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான்மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்,அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
பெயர் மாற்ற கோரிக்கை
நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர் வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது எனவே சுன்னத்வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறேன்!
என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அரஃபா மஸ்ஜித் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நீடூரில் பள்ளிவாசல்களுக்கு பஞ்சமில்லை, எங்கு திரும்பினாலும் பள்ளிவாசல்கள். இப்படி பள்ளிவாசல்கள் நிறைந்த ஊரில், குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயல்படும் பள்ளிவாசல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நீடூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை முயற்சியை மேற்கொண்டது. அல்லாஹ்வின் உதவியினால் இந்த பணி வெற்றியடைந்தது. அல்லாஹ்வின் நல்லுதவியுடன் நீடூரில் 'அரஃபா மஸ்ஜித்' என்ற பெயரில் ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி இனிதே தொடங்கபட்டுள்ளது நபிவழியை அப்படியே பின்பற்ற வேண்டும் என ஒரு குறிக்கோளுக்காகவே இப்பள்ளி கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏகத்துவ பள்ளி கட்


அரஃபா மஸ்ஜித்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நீடூரில் பள்ளிவாசல்களுக்கு பஞ்சமில்லை, எங்கு திரும்பினாலும் பள்ளிவாசல்கள். இப்படி பள்ளிவாசல்கள் நிறைந்த ஊரில், குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயல்படும் பள்ளிவாசல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நீடூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை முயற்சியை மேற்கொண்டது. அல்லாஹ்வின் உதவியினால் இந்த பணி வெற்றியடைந்தது.
அல்லாஹ்வின் நல்லுதவியுடன் நீடூரில் 'அரஃபா மஸ்ஜித்' என்ற பெயரில் ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி இனிதே தொடங்கபட்டுள்ளது நபிவழியை அப்படியே பின்பற்ற வேண்டும் என ஒரு குறிக்கோளுக்காகவே இப்பள்ளி கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏகத்துவ பள்ளி கட்டுவதற்கு நீடூர் சகோதரர் ஒருவர்நீடூர் சலவாத் பாவா காலனியில் உள்ள தனக்கு சொந்தமான 3024சதுரடியை கொண்ட மனையை இலவசமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு தந்துள்ளார்.
இப்பள்ளி கட்டுமான பணிக்காக ரூபாய் 30 லட்சம் தேவை என கணக்கிடப்பட்டுள்ளதுஇன்ஷா அல்லாஹ் இப்பள்ளியின் ஒவ்வொரு கட்டத்திலும் வரவு செலவு கணக்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்இங்கு கட்டாய வசூல் கிடையாதுஇப்பள்ளியினை கட்டி முடிக்க நாம் அனைவரும் நம்மளால் முடிந்த உதவியை செய்து நிரந்தர நன்மை தர கூடிய இப்பணியை நல்லவிதமாக முடிப்பதற்கு அல்லாஹ்விடம் துவா கேட்போமாக
ஆமீன்.
 பள்ளியின் கட்டுமான பணி...
அரஃபா மஸ்ஜித்தின் கட்டுமானப்பணி முதல்தளம் வரை அல்லாஹ்வின் பேரருளால் இனிதே நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

கட்டுமானப்பணியின் போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக கீழே;





பள்ளியின்ஆரம்பகால கட்டுமான பணியின் போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக கீழே;