Pages

Sunday 26 August 2012

ஹஜ்ஜின் சிறப்புகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, November 21, 2009, 16:44
எம். ஷம்சுல்லுஹா
அமல்களில் சிறந்தது
“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26
பெண்களின் ஜிஹாத்
“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520
அன்று பிறந்த பாலகர்
“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1521
சுவனமே பரிசு
“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773
தவிடுபொடியாகும் தவறுகள்
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173, இப்னுகுஸைமா
சிறப்பு விருந்தினர்
“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884
இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092
ரமளானில் ஒரு ஹஜ்
உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப் பெண்ணை நோக்கி, “நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத் தடையாக அமைந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்) செல்வதற்காக இன்னோர் ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2201
அரஃபா நாள் – மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்
“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7702
ஒன்பதாம் நாள் விடுதலை நாள்
அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2402
அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி),
நூல்:திர்மிதி3509
அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976
சிறியவரின் ஜிஹாத் – ஹஜ்
முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத் ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ 2579
தல்பியாவின் சிறப்பு
எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758
தவாஃபின் சிறப்பு
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947
சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்
கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884
மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727
ஜம்ஜமின் சிறப்பு
அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520
மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதன் சிறப்பு
மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மத் 14167, இப்னுமாஜா 1396
மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட
எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190
மஸ்ஜிதுல் குபாவில் தொழுவதன் சிறப்பு
யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரலி), நூல்: இப்னுமாஜா 1406, நஸயீ 692
Print This page

Saturday 25 August 2012

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை
சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.
சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
  • அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்.
  • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்! இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!
நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.
இந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?
சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்
சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா?  சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?
நபி வழி சுன்னத் சுன்னத் ஜமாஅத்
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. சாதாரண எறும்பு கடித்தால் கூடா யா! கவுஸ், நாகூர் ஆண்டவரே, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது
இணைவைப்பு வழிபாடு கிடையாது சமாதி வழிபாடு முக்கியத்துவம்
மார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது! மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிது, பைஅத்,  தீட்சை என்று நம்பி மோசம் போவது!
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள், வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது ஸலவாத்துன்நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது!
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது!
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது! இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது

ரஜினிகாந்த உடல் நலம் பெற பாத்தி(யா)ஹா ஓதும் அசரத்தும் தொப்பிபோட்ட “சுன்னத் ஜமாத்!!!!!” கூட்டமும்.


காசு கொடுத்தால் ரஜினி பிறந்த நாள் விழாவுக்கும் பாத்தி(யா)ஹா

இது வேறு எங்கும் அல்ல நமது தமிழகத்தில்தான்

கைலி உடுத்தி தொப்பி போட்ட “சுன்னத்ஜமாத்” வீர முழக்கத்துடன் வீறு நடைபோடும் தர்ஹா வழிபாடு

சுன்னத்ஜமாத் என்ற பெயரில் சபரிமலைக்கு இறுமுடியும் கட்டுவோம்!!

Friday 24 August 2012

நிதர்சனமான உண்மை நீடூரில் 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாகை வடக்கு மாவட்டத்தில்
பல்வேறு மார்க்க & சமுதாய பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது
அதில் நீடூர் கிளையும் அடங்கும் இங்கு நமது ஜாமாத் சார்பாக
பல் வேறு மார்க்க நிகழ்ச்சி களையும், சமுதாயம் பயன் பெரும் பெருட்டு
பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறோம் இதன் மூலம் நமது
ஜாமாதிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உருவானது அல்ஹம்துலில்லாஹ்
நமக்கென்று ஒரே ஒரு அலுவலகம் இருந்த காலத்தில் மிக சொற்பமான
நபர்கள் மட்டுமே இருந்துவந்தார்கள் இன்று அல்லாஹ் மட்டுமே வணங்கும்  மாறு
நமது இறுதி தூதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் காட்டிதந்தவாறு
ஓர் இறை இல்லம் எழுப்பட்டு அதுவும் முடியும் தருவாயில் உள்ளது
இந்த வருடம் ரமலான் முழுவதும் சிறப்பு சொற்பொழிவுகள்
இறுதி பத்து நாட்களில் கீயமுல் லைல் தொழுகை என நமது
ஜமாஅத் பணிகள் விரிவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்
தரிக்காவிலும் தறிகெட்டு , மதஹபு மயைகைளில் முழ்கி போன
மக்களுக்கு ஏகத்துவ கொள்கை அவர்கள் உள்ளதை புரட்டி போட்டது அல்ஹம்துலில்லாஹ்
எந்த வருடமும் இல்லாத மக்கள் வெள்ளம் இந்த வருடம் பெருநாள் தொழுகையில்
மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள் பெண்கள் மட்டும் சுமார் 200 க்கும் அதிகமாகவும்
ஆண்கள் சுமார் 150  க்கும் அதிகமாகவும் குழந்தைகள் உட்பட 500 க்கும் அதிகமான பேர்
பெருநாள் தொழுகைய நபி (ஸல்) அவர்கள் காண்பித்து தந்தவாறு நிறைவேற்றினார்கள்
இதில் சகோ : புஹாரி அவர்கள் யார் குற்ற்றவாளி ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அந்த உரையில் எப்படி ஒருவன் குற்றவாளியாக உருவாகிறான் அவனுக்கு
இறைவன் தண்டணைய எவ்வாறு வழங்குவான் என்றும்
இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் அதனை அல்லாஹ்வுடைய
தூதர் ஸல் அவர்கள் எவ்வாறு காண்பித்து தந்தார்கள் என்பதை
குரான் ,ஹதிஸ் அடிப்படையில் மிக அழகாக எளிய முறையில்
விளக்கம் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.9.32.




A.MOHAMED MANSOOR
Abu Dhabi 
United Arab Emirates 
Mobile:+97156 742 44 88
Ples on vist:
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
أَن تَعْتَدُواْ وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ

Wednesday 22 August 2012


niduri.com

நீடூர்-நெய்வாசல் “அரஃபா மஸ்ஜித்” திடலில் நோன்பு பெருநாள் தொழுகை காட்சிகள், பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்பு

அரஃபா மஸ்ஜிதின் சிறப்புகள்:
நமது நீடூர்-நெய்வாசலில் இந்த வருடம் ரமழான் மாதம் முப்பது நாட்களும் அரஃபா மஸ்ஜிதில் ( நீடூர் ரயில்வே கேட் அருகில் செயல்படும் தற்காலிக இடம்) தராவீஹ் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. ஆண்களும் பெண்களுமாக சுமார் நூறு பேர் வரை களந்து கொண்டார்கள். ரமழான் முப்பது நாட்களும் இஃப்தார் நிகழ்ச்சியும், கஞ்சி முறையும்  வெகு சிறப்பாக அனைவரும் பாராட்டும் விதமாக செயல்படுத்தப்பட்டது. ரமழானுடைய இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையும் சஹர் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.

நபி(ஸல்)அவர்கள் வழியை பின்பற்றி:
அதன் தொடராக நோன்பு பெருநாள் தொழுகை அரஃபா மஸ்ஜிதின் (ஸலவாத் பாவா காலணி) திடலில் நேற்று காலை 7.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இரண்டு ஈட்டியின் அளவு சூரியன் வரும்போது நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுது இருக்கிறார்கள் அந்த சுன்னத்தை பின்பற்றி காலை 7.30 மணிக்கு தொழுகை நடைபெற்றது. (அரபு நாடுகளில் இதுபோன்று காலையிலேயே தொழுகை நடப்பதை நாம் அறிவோம்.) அரஃபா மஸ்ஜிதின் இமாம் புஹாரி அவர்கள் தொழுகையை தலைமை ஏற்று நடத்தினார்கள் இதில் சுமார் 200 க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் களந்துகொண்டார்கள்.
ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்பு:
நபி(ஸல்)அவர்களின் சுன்னத்தை பெருநாள் தொழுகையிலும் பின்பற்றும் விதமாக (நமது ஊரில் நடப்பது இது முதல் முறையாக முன்பு மயிலாடுறைபோய் தொழுது வந்தார்கள்) நமது ஊர் பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள். விதவிதமாக இன்றையதின்ம் அடுப்படியில் சமையலில் தங்களின் நேரத்தை செலவு செய்யும் பெண்கள். நபி(ஸல்)அவர்கள் காலத்தில் பெருநாள் அன்று மாதவிடாய் காலத்தில இருக்கும சஹாபி பெண்கள் கூட (அவர்களுக்கு தொழுகை கடமையில்லை) பெருநாள் குத்பா உரையை கேட்க வருவார்கள். அதனால் மார்க்க அறிவை பெறும் விஷயத்தில் இனியும் காலதாமதம் செய்யகூடாது என்பதை உணர்நது கலந்து கொண்ட நமது சகோதரிகள் ஆர்வமுடன் பெருநாள் தொழுகையில் களந்துகொண்டார்கள்.
சரியான தகவல் அனைத்து பெண்களுக்கும்போய் சேர வி்ல்லை இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் முறையாக ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்யப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.
பொதுவாகவே பெண்கள் படிக்கும் விஷயத்தில் ஆண்களைவிட அதிக ஆர்வம் உடையவர்கள் இதை இன்று நேற்றல்ல நபி(ஸல்)அவர்கள் காலம் முதல் பார்த்து வருகிறோம். மதீனத்து சஹாபி பெண்கள் மார்க்க விஷயத்தை படிக்கும் விஷயத்திலும், இன்னும் போரில் கலந்து கொள்வதற்கு கூட போட்டி போடுபவா்களாக இருந்து இருக்கிறார்கள். நன்மையிபால் முந்தக்கூடியவர்களாக பெண்கள்  இருக்கிறார்கள். ஆனால் நாம் தான் அவர்களை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
அடுப்பு ஊதவும், சமைக்கவும் என்று அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டோம். மார்க்க அறிவு இல்லாததால்தான் ஷிர்க்கான, பித்அத்தான், காரியங்களை மார்க்கம் என்று செய்து வருகிறார்கள். மேலும் மார்க்க அறிவு இல்லாததால், தொழுகை இல்லாததால் சினிமா, சீரியல் என்று மூழ்கி அதனால் உள்ளமும் கெட்டு தவறான வழிகளுக்கு சென்று விடுகிறார்கள். இதற்கு நாம் தான் பொறுப்பாக இருக்கிறோம். வரும் காலங்களிலாவது இவை மாற வேண்டும். வீட்டு சூழல் அல்லாஹ்வின் அச்சம் உடையதாக மாறவேண்டும் அதற்கான ஒரு சிரிய முயற்சியே இது. அல்லாஹ் நமது முயற்சிகளை வெற்றியாக்குவானாக. ஆமீன்
தகவல் மற்றும் புகைப்பட உதவி
நீடூர்-நெய்வாசல் TNTJ
-தன்டேல்
 niduri.com

Thursday 16 August 2012

15 attachments Download all attachments View all images

2012-08-16 03.18.05.jpg
1151K View Download

2012-08-16 03.17.56.jpg
1197K View Download

2012-08-16 00.49.24.jpg
992K View Download

2012-08-16 00.55.56.jpg
1205K View Download

2012-08-16 00.54.20.jpg
1262K View Download

2012-08-16 03.04.50.jpg
1089K View Download

2012-08-16 03.05.06.jpg
1099K View Download

2012-08-16 00.48.32.jpg
1267K View Download

2012-08-16 03.17.40.jpg
1172K View Download

2012-08-16 00.48.18.jpg
1165K View Download

2012-08-16 00.55.50.jpg
1177K View Download

2012-08-16 00.55.38.jpg
1247K View Download

2012-08-16 03.05.16.jpg
1141K View Download

2012-08-16 00.49.02.jpg
1220K View Download

2012-08-16 00.48.54.jpg
1196
உலகப்பொதுமறையின் விளக்கங்களின் தொகுப்பு!!! 16....
Tntj Tabuk Maa 8:39am Aug 15
உலகப்பொதுமறையின் விளக்கங்களின் தொகுப்பு!!!
16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்!!!!

ஏக இறைவனின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் தமிழாக்கத்தின் - விளக்கங்களின் தொகுப்புகளை
விர்வாகப் பார்ப்போம் வாருங்கள்!!!

16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்:

2:47, 2:122 ஆகிய வசனங்களில் "இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருந்தேன்'' என்று இறைவன் கூறுகிறான்.

பிறப்பின் அடிப்படையில் எவரும் எந்தச்சிறப்பும் பெறமுடியாது என்பது இஸ்லாமியக் கோட்பாடு. (பார்க்க திருக்குர்ஆன் 2:111, 3:75, 49:13)

எனவே இஸ்ரவேலர்களுக்கு வழங்கிய ஆட்சி, அதிகாரம், பொருள் வசதி போன்ற சிறப்புக்களையே இது குறிக்கிறது.

யஃகூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், தாவூத், ஸுலைமான், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா உள்ளிட்ட அதிகமான இறைத் தூதர்கள் இஸ்ரவேலர்களில் தான் அனுப்பப்பட்டனர்.

இந்தச் சிறப்பு மற்றவர்களுக்குக் கிடைக்க வில்லை. திருக்குர்ஆனின் 5:20 வசனம் இதைத் தெளிவாகவே கூறுகிறது.

ஆன்மிக நிலையைப் பொறுத்த வரை நன்மையை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டு சிறந்த சமுதாயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் திகழ்வதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 2:143, 3:110) இந்தச் சிறப்பு இஸ்ரவேலர்களுக்கு இல்லை.

2:47, 2:122 ஆகிய வசனங்களில் "சிறப்பித்திருந்தேன்' என்ற இறந்த கால வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் அவர்களுக்குச் சில வசதிகள் வழங்கப்பட்டதை இது குறிக்குமே தவிர காலா காலத்துக்கும் அவர்கள் சிறப்புற்று விளங்குவார்கள் என்ற கருத்தைத் தராது.

சிறப்பிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் பின்னர் இறைவனின் கடுமையான கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளானதாகத் திருக்குர்ஆன் 2:88, 2:159, 4:46-47, 5:13, 5:60, 5:64, 5:78 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

Tuesday 14 August 2012

வாரி வழங்குவோம்

2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.


நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி, வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902

ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்) அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாக வாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் வர்ணித்துக் கூறி இருக்கின்றார்கள்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.

அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.

2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,

1.       தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.

2.       தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.

மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும், தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.  

ரமளான் மாதத்தில் சடைவடையாமல் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.

உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.

ஒருக் குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தான தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்ததி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.

சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.    

நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள். 1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.

இன்று நம்மில் பலர் கை வசம் எதுவும் இருந்தால் கொடுத்து உதவுகிறோம்,

கை வசம் எதுவும் இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகிறோம்,

நம்மிடம் இருப்பு இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம், உறவினர்களிடம், அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்ய வேண்டும், அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;ய வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.

இவ்வளவு தான் என்ற வறையரை.

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று வறையருத்துக் கொடுப்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்படும் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக அமையும்.

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள் நூல் புகாரி 1433.

தடுத்துக் கொண்டால் ?
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. 1444 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

படிப்பினைகள்
அல்லாஹ்வுக்காகவென்ற சிந்தனையில் தானதர்மம், மற்றும் தஃவாப் பணிகளுக்கு வாரி வழங்கினால் வாரி வழங்குபவர்களின் பொருளாதாரத்தை அல்லாஹ் பல்கிப் பெருகச் செய்வான்.

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் இதற்கு மேல் முடியாது என்று சிறயளவில் வழங்கினாலும், அதே அளவே அல்லாஹ்வும் வழங்குவான். கூடுதல் அபிவிருத்தயை எதிர் பார்க்க முடியாது.

கொடு;க்காமல் தடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும்.

நோன்பு அல்லாஹ்வுக்குரியது என்று அல்லாஹ் கூறுவதால் அல்லாஹ்விற்காக நோன்பு நோற்றிருக்கும் புனித ரமளான் மாதத்தில் தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும் தியாகப் பணியில் ஈடுபட்டால் அவற்றிற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்குவான்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம்.
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அரஃபா மஸ்ஜித்தின் கட்டுமானப்பணிக்காக நன்கொடை கொடுத்த நல்உள்ளங்கள்

அரஃபா மஸ்ஜித் பள்ளியின் கட்டிட பணிக்கு இதுவரை (01-06-2012) நன்கொடை கொடுத்த நல்உள்ளங்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக !!!!!ஆமீன்.
  நன்கொடை அளித்தவர்களின் விபரம் கீழே:
1. நீடூர் சகோதரர் சர்புதீன் அவர்கள் அவருக்கு சொந்தமான நீடூர் சலவாத் பாவா காலனியில் உள்ள 3024 அடி உள்ள மனையை அல்லாஹ்வின் இல்லத்திற்காக அளித்துள்ளார்.

2. ஹாங்காங்க்கில் வசிக்கும் நீடூர் சகோதரர் ஒருவர் ரூ.2 லட்சம் அளித்துள்ளார்.

3. ஹாங்காங்க்கில் வசிக்கும் நீடூர் சகோதரர் ஒருவர் ரூ.1 லட்சம் அளித்துள்ளார்.

4. புருனையில் வசிக்கும் நீடூர் சகோதரர் அஸ்ரஃப் அவர்கள் ரூ.32
,000.00அளித்துள்ளார்.

5. பிரான்ஸில் வசிக்கும் நீடூர் சகோதரி ஜூலைஹா அவர்கள் ரூ.19
,500.00அளித்துள்ளார்.

6. நீடூர் சகோதரி நஸீமா அவர்கள் ரூ.15
,000.00 அளித்துள்ளார்.

7. எலந்தங்குடி சகோதரி
பாத்திமாஜின்னா அவர்கள் ரூ.10,000.00 அளித்துள்ளார்.

8. நீடூர் சகோதரர் ஹாஜி பர்னிச்சர் ரியாஸ் அவர்கள் ரூ.10
,000.00அளித்துள்ளார்.

9. துபாய்யில் வசிக்கும் நீடூர் சகோதரர் சிராஜூதீன் அவர்கள் ரூ.10
,000.00அளித்துள்ளார்.

10. நீடூர் அரபி தெரு சகோதரர் புகாரி அவர்கள் ரூ.5
,000.00 அளித்துள்ளார்

11. துபாய்யில் வசிக்கும் நீடூர் அஜீஸ் நகர் சகோதரர் மன்சூர் அவர்கள் ரூ.25
,000.00மதிப்புள்ள செங்கல், மணல் வழங்கியுள்ளார்.

12.துபாய்யில் வசிக்கும் நீடூர் அஜீஸ் நகர் சகோதரர் மன்சூர் அவர்கள் மேலும் ரூ.22,625.00 அளித்துள்ளார்.
13.மயிலாடுதுறை சகோதரர் அமீன்பாய் அவர்கள் 25 மூட்டை சிமெண்ட் அன்பளிப்பாக அளித்துள்ளார்.

14.
ஏனங்குடி சகோதரி ரஹ்மத் அவர்கள் ரூ.10,000.00 அளித்துள்ளார்

15.சென்னை சகோதரர் ஒருவர் ரூ.9,000.00 அளித்துள்ளார்.
16. துபாய் மன்சூர் அவர்கள் ரூ.34,200.00 அளித்துள்ளார்.

17. நீடூர் சகோதரர் M.A.P தாஜ்தீன் அவர்கள் ரூ.25,000.00 அளித்துள்ளார்.

18. நீடூர் பட்டுக்கார வீடு சகோநதரர் பஸீர் அவர்கள் ரூ.10,000.00 அளித்துள்ளார்.
19. அஜீஸ் நகர் சகோதரர் பாரூக் அவர்கள் ரூ.5,000.00 அளித்துள்ளார்.

20. நீடூர் சகோதரி தாஹிரா பீவி அவர்கள் ரூ1,000.00 அளித்துள்ளார்.

21. நீடூர் சகோதரர் குலாம் தஸ்தஹீர் அவர்கள் ரூ.1,000.00 அளித்துள்ளார்.
 
22. ஹாங்காங்க்கில் வசிக்கும் நீடூர் ஜின்னா தெரு ஹாஜா சகோதரர்கள் ரூ.12,700.00 அளித்துள்ளார்.
 23. ஹாங்காங்க்கில் வசிக்கும் நீடூர் புதுமனை தெரு சகோதரர் அலிம் அவர்கள் ரூ.3,600.00 அளித்துள்ளார்.

24. ஹாங்காங்க்கில் வசிக்கும் நீடூர் ஜின்னா தெரு சகோதரர் சாதிக் அவர்கள் ரூ.3,600.00 அளித்துள்ளார்.

அல்லாஹ்வின் பள்ளி கட்டுமானப்பணிக்கு கடனாக கொடுத்து உதவியவர்கள்:
1. மயிலாடுதுறை திருச்சி ஸ்டீல் நிறுவனத்தார் ரூ. 2 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்கள்.

2. நீடூர் சகோதரர் ரோஜா அவர்கள் ரூ.75
,000.00 கடனாக கொடுத்துள்ளார்.

3. மயிலாடுதுறை அல்-ஹசீனா சகோதரர் சாதிக் அவர்கள் ரூ.50
,000.00 கடனாக கொடுத்துள்ளார்.

4. நீடூர் மக்கா ஏஜென்ஸி சகோதரர் பஜூல் அவர்கள் ரூ.50
,000.00 கடனாக கொடுத்துள்ளார்.
அரஃபா மஸ்ஜித் பள்ளியின் கட்டிட பணிக்கு மேலும் உதவ விரும்பும் சகோதரர்கள் உங்களின் நன்கொடைகளை கீழே தரப்பட்டுள்ள எங்களின் வங்கி கணக்கிற்கு தயவுசெய்து அனுப்பி வைக்கவும்.

வங்கியின் விபரம் (BANK DETAILS)
பெயர் (Name): TAMIL NADU THOWHEED JAMAATH
கணக்கு எண் (Account Number): 1232135000001091
வங்கி பெயர் (Bank Name) : KARUR VYSYA BANK (K.V.B.)
வங்கி கிளை(Branch): MAYILADUTHURAI

மேலதிக விபரங்களுக்கு, கீழே உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நீடூர் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்;

தலைவர்: M. S. அலாவுதீன்- மொபைல் எண்: +91-94877 55909 begin_of_the_skype_highlighting +91-94877 55909 end_of_the_skype_highlighting
செயலாளர்: அய்யுப் - மொபைல் எண்: +91-94882 15235 begin_of_the_skype_highlighting +91-94882 15235

நீடூர் தாற்காலிக ஏகத்துவ பள்ளி!

நீடூர் தாற்காலிக ஏகத்துவ பள்ளி!
நீடூரில் ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதரர்களின் நீண்ட நாள் கனவான நபிவழிப் பள்ளி கடந்த ஜும்மா தினம் 7/10/2011 அன்று தற்காலிகமாக ஜவஹர் தெருவில் முதல் வீட்டின் மாடியில் ஜும்மா தொழுகையொடு தொடங்கியது.
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர் - 4)...
Tntj Tabuk Maa 5:08am Aug 14
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர் - 4)
அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம்.....!!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! அழைப்புப் பணியின் அவசியத்தை அனைவரும் அறிந்து கொள்வோம் வாருங்கள்!!!

அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம்:

இந்திய திருநாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து அவைகள் பிரச்சாரம் புரிவதற்கு தஃவாவிற்காக ஒவ்வொரு குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் அணுகு முறைகள் தான் முக்கிய காரணியாய்த் திகழ்கின்றன.

எதைப்பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும்? எதற்கு எந்தளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? என்ற கேள்விக்குப் பலரும் பல விதத்தில் பதிலளிக்கின்றனர்.

இன்றைய இஸ்லாமிய “உம்மத்” அதன் அடிப்படைக் கடமையான தொழுகையைப் புறக்கணித்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றது.

எனவே, தொழுகைக்காக அழைப்பது அவசியமானதாகும். இதனடிப்படையில் தஃவத் என்றாலே தொழுகைக்காக அழைப்பதுதான் என்பதுபோல்; சில சகோதரர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

சரியானதொரு இஸ்லாமிய சமூக அமைப்பைத் தோற்றுவிக்காமல் நாம் எவ்வளவுதான் பிரச்சாரம் புரிந்தாலும் ஜாஹிலிய்யத்தான சமூக முறையைப் பின்பற்றி வரும் மக்களுக்கு அது எத்தகைய பிரயோசனத்தையும் அளிக்கப் போவதில்லை.

எனவே, இஸ்லாமிய சமூக அமைப்பொன்றைத் தோற்றுவிப்பதற்கான அழைப்பே தற்போது அவசியமானதாகும் எனக் கருதுவோர் சிலர்.
என்னதான் பெரிதாகப் போதனை செய்தாலும் அதிகாரம் இல்லாவிட்டால் அதன் பயனைப் பூரணமாகப் பெறமுடியாது போய்விடும். எனவே, இஸ்லாமிய ஆட்சி ஒன்றை நிறுவுவது அவசியமானது.

ஆட்சி அமையப் பெற்றுவிட்டால் ஆயிரம் பயான்காளால் செய்ய முடியாததைக் கூட ஒரு கட்டளை மூலமாகச் செய்து விடலாம். எனவே, ஆட்சியை இலக்காகக் கொண்டதாகவே எமது தஃவா அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி நகரும் போது இடையில் குறுக்கிடும் சில விஷயங்களை நாம் அலட்டிக்கொள்ளக் கூடாது.

எமது இலக்கு விரிவானது. அதனை அடையக்கூடியதாகவே எமது தஃவா அமைய வேண்டும் எனச் சில சகோதரர்கள் எண்ணுகின்றனர்.
என்னதான் ஒருவன் பெரிய “இபாதத்” செய்தாலும் அவன் “ஷிர்க்” செய்து விட்டால் அவனது வணக்கங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.

அதே போன்று வணக்க வழிபாடுகளில் “பித்அத்” எனும் புதியன புகுந்திருந்தால் அல்லாஹ்வால் அவைகள் ஏற்கப்படமாட்டா.
எனவே, ஷிர்க் பித்அத் பற்றி எச்சரிக்கை செய்வதே அவசியமானதாகும் எனக் கருதுகின்றனர் சிலர்.

மேலே நாம் கூறிய அத்தனையும் தஃவாவின் முக்கிய அங்கங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதே வேளை யானை பார்த்த குருடர் போல் இதுதான் “தஃவா” வெனக் கூறி “தஃவத்”தின் வட்டத்தைச் சுருக்கிவிடவும் கூடாது.

மார்க்கத்தை மறைக்கலாமா?

அதுபோல் “தஃவா”வில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வெண்டும் என்பதில் அபிப்பிராயப் பேதப்பட்டிருக்கும் சகோதர அமைப்புக்களுக்கிடையே சில விஷயங்களை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டுமா இல்லையா என்பதிலும் கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

மார்க்கத்தில் (ஏற்கனவே சொல்லப்பட்ட) சில விஷயங்களை மக்கள் மன்றத்தில் வைத்தால் மக்கள் குழப்பமுறுவர். எனவே அந்த சில விஷயங்களை நாமும் செய்யாமல் பிறருக்கும் சொல்லாமல், பிறர் அவை பற்றி கேட்டால் கூட அவை பற்றி விவரிக்காமல் விட்டு விட வேண்டும். இதுவும் அல்குர்ஆன் கூறும் “தஃவா” அமைப்பே எனச்சில சகோதரர்கள் கருதுகின்றனர்.

“நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் அருளி அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்திக் கூறிய பின்னும், எவர்கள் (அவற்றை) மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். (மற்றும்) சபிப்போரும் அவர்களை சபிக்கின்றனர்”. (2:159)

அல்லாஹ்வே வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் அவற்றில் சிலதை மறைத்துத்தான் “தஃவா” செய்ய வேண்டு மென்பது கண்டனத்துக்குரிய ஒன்று என்பதை மேற்படி வசனம் தெளிவு படுத்துகின்றது.

அல்லாஹ் எம்மைவிட எதைச் சொல்ல வேண்டும்? எதைச் சொல்லக் கூடாது என்பதை அறிந்தவனல்லவா? அல்லாஹ்வின் கட்டளை களை மக்களுக்கு எடுத்துச் சொல்பவனே அழைப் பாளனாவான். அதை விட்டு விட்டு அல்லாஹ் கூறியவற்றில் சிலதை மக்களுக்குச் சொல்ல முடியாது என “சென்ஸார்” (தணிக்கை) செய்யும் மேலதிகாரியல்லவே அவன்.

மக்கள் குழப்பமுறுவர் என்பதைக் காரணம் காட்டி சத்தியத்தை மூடி மறைப்பது அர்த்தமற்றதாகும்.

இதைச் சொன்னால் இவர்கள் ஏற்பார்கள்; இதைச் சொன்னால் இவர்கள் ஏற்க மாட்டார்கள் என நாமாக முடிவு செய்வது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகும். இதனை அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது” எனக் கூறும் அல்குர்ஆனின் எண்பதாவது அத்தியாயம் மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.

இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் கட்டாயமே நமக்கு உண்டு, அதனை ஏற்பதற்குரிய மனோபக்குவத்தை அல்லாஹ் தான் கொடுக்க வேண்டுமேயல்லாமல் நாமாக முயன்று அதைச் செய்து விட முடியாது.
இதற்கான பல சான்றுகளை அல்குர்ஆனில் காணலாம். நாம் சொல்லும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டால் இருவகையான கூலிகள் கிடைக்கும். அது மறுக்கப்பட்டால் நமது கடமை நீங்கிவிடும்.

சத்தியத்தை மறுப்போர் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
உண்மை தெளிவாக இருக்கும் போது அதிலிருந்து தடம் புறழ்வோர் பற்றி இஸ்லாம் பின்வருமாறு கூறுகின்றது.

“இதை (அல்லாஹ் கூறுகின்ற உதாரணத்தை) கொண்டு அவன் அநேகரை வழி கெடும்படி செய்கின்றான். அநேகரை நேர்வழி பெறும் படியும் செய்கின்றான். (ஆனால் இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத்தவிர (மற்றவர்) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்ய மாட்டான்.” (2:26)

“உங்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்கின்ற தெளிந்த நிலையில் விட்டுச் செல்கின்றேன். தெளிவான இம்மார்க்கத்திலிருந்து எனக்குப் பின்னர் அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு எவனும் வழி கெட மாட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

சத்தியத்தைச் சொல்லும் போது பாவிகளும், அழிந்து நாசமாகக் கூடியோரும், உள்ளங்களுக்கு முத்திரை குத்தப்பட்டோரும் மறுக்கவே செய்வர். இவர்கள் மறுப்பார்களே என்பதற்காக சத்தியத்தை ஏற்கும் மனோபக்குவம் பெற்ற விசுவாசிகளிடம் கூட உண்மை சென்றுவிடா வண்ணம் மூடி மறைப்பதும், முலாம் பூசுவதும் பெரும் அநியாயமும் அறியாமையுமாகும்.

இவ்வறியாமையை நீக்குவான் வேண்டி, இவ்வகையான எண்ணத்திற்கு அடிப்படைக்காரணமாய் அமைந்த மாற்றுக் கருத்துடைய நண்பர்கள் தமக்குச் சான்றாக எடுத்து வைக்கும் அல்குர்ஆன் வசனங்களின் உண்மைப் பொருள் யாது என்பது பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.